[ad_1]
Chennai: தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் பல்லவன் இல்லம் உள்பட பல பணிமனைகள் அடகு வைக்கப்பட்டதாக தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 490 பேருந்துகள், அயனாவரம், மந்தைவெளி பணிமனைகள் மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையிடமாக இருக்கும் பல்லவன் இல்லம் உள்பட மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சொத்துகள் மட்டும் சுமார் 580.63 கோடி ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதைக்குறிப்பிட்டு தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துப் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ’பல்லவன் இல்லத்தை வங்கிகளில் ரூ.30.50 கோடிக்கு அடமானம் வைத்தது தி.மு.க ஆட்சியில்தான். பல்லவன் இல்லம் மட்டுமன்றி மேலும் 6 இடங்கள் தி.மு.க ஆட்சியில் அடமானம் வைக்கப்பட்டது. அவர்களின் ஆட்சி காலத்தில் வெறும் 10 புதிய பணிமனைகளே தொடங்கப்பட்டன. ஆனால், எங்கள் ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் கழகங்களின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.10,513 கோடி நிதி திரட்டப்பட்டது. பணிமனை பராமரிப்புக்காக மட்டும் 53 விருதுகளையும் நாங்கள் பெற்றுள்ளோம்’ என்றார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
’பல்லவன் இல்லம் அடகு வைக்கப்பட்டது யார் ஆட்சியில்?’ - தி.மு.கவுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் கேள்வி
TAGS :
COMMENTS