[ad_1]





'நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறேன்' என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். 





கோயம்புத்தூரில், நடிகை ஓவியா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. ஆனால், நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன். சரியான நேரத்தில்தான் அவர் வருகிறார் என தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிகிறது. நடிகர்களுக்கு பணி ஓய்வு என்பது கிடையாது. அது மக்கள் கையில்தான் உள்ளது. 

எனவே, மக்கள் வாக்களித்துத் தேர்வுசெய்தால் அது நல்ல விஷயம்தானே. சினிமாவில் இருக்கும்போது, சமூகத்துக்குப் பெரிய அளவில் செய்ய முடியாமல் போகலாம். ஆனால், அரசியல் என்று வரும்போது அவர் சிறப்பாகச் செயல்படுவார். அரசியலை மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு தளமாகக் கருதுகிறேன். அவர் செய்வார் என நான் நம்புகின்றேன். மக்களுக்காக நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. கமலுக்கு பெரிய அளவில் புகழ், பணம் உள்ளது. எனவே அவர், பணத்துக்காக அரசியலுக்கு வரமாட்டார். அவர் அரசியலுக்கு வந்தால், மக்களுக்கு நல்லது செய்வார்' என்றார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");