[ad_1]





Chennai: 'ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தோட்டா, கடலோரக் காவல் படையுடையதல்ல' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 




 

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்மீது இந்திய கடலோரக் காவல்படையினர் கடந்த 13-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகியோர் கைகளில் காயம் ஏற்பட்டது. மேலும், விசாரணை என மீனவர்களைப் பிடித்த கடலோரக் காவல்படையினர், அவர்களை இரும்புக் கம்பிகொண்டு தாக்கியதாகவும் புகார் எழுந்தது. காயமடைந்த மீனவர்கள், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய கடலோரக் காவல்படையினர், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தனர். 

இந்த நிலையில், சென்னை வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், ‘சம்பவம்குறித்து தகவலறிந்த உடனே கடலோரக் காவல்படையினரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தேன். அதன்பின்னரே, அவர்கள் தரப்பிலிருந்து ஆங்கிலத்தில் முதலிலும், பின்னர் தமிழிலும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கடலோரக் காவல்படை தலைவரிடமும் விளக்கம் கேட்டேன். அத்தகைய தோட்டா, கடலோரக் காவல்படையினரிடமே இல்லை என்று அவர் விளக்கமளித்தார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நான் தீவிரமாக விசாரிக்கவேண்டி இருக்கிறது. நமது மீனவர்களை சொந்த நாட்டுப் படையினரே தாக்குவது போன்ற தொனியில் பத்திரிகையாளர்கள் எழுத வேண்டாம்.




மீனவர்கள் படும் துன்பம் எனக்குத் தெரியும். அவர்கள் நலனுக்காக அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பா.ஜ.க ஆட்சியில் இல்லாதபோது மீனவர்களுக்கு பிரச்னை வந்தபோது, அதற்காக ராமேஸ்வரம் வரை வந்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர், சுஷ்மா ஸ்வராஜ். எனவே, இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தோட்டா, கடலோரக் காவல்படையுடையதல்ல. அந்தத் தோட்டா, எங்கிருந்து வந்தது என்றே தெரியாது. அதேநேரம், மீனவர்கள் கூறியதிலும் உண்மை இருக்கலாம். அதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்படும்’ என்றார். 
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");