[ad_1]
கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வளையங்குட்டை என்கிற வனப்பகுதியில் 50-வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்துகிடந்த சம்பவம் கோவையில் சோகத்தை விதைத்துள்ளது. கோவையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதி யானைகளின் புகலிடம். வலைசைப்பாதைகள் நிறைந்த வனப் பகுதி. கடந்த இரண்டு ஆண்டுகளில் யானைகள் இறப்பு இந்தப் பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால், யானை நேசர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலையில் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று ஒரு யானை இறந்துள்ளது. மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலாந்துறை அடுத்துள்ள வளையங்குட்டை வனப்பகுதியில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறை மருத்துவர் மனோகரன் மற்றும் வனவர் செந்தில்குமார் அங்கு உள்ள மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் முடிவில், அந்த யானை உடல்நலக்குறைவால் இறந்து இருக்கிறது. அழுகிய நிலையில் இருப்பதை வைத்துப் பார்க்கும் போது இந்த யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். பிரதே பரிசோதனைக்கு பின்னர் அந்தப் பகுதியிலேயே யானையை புதைக்க இருப்பதாக தெரிவித்தனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இறந்து ஒருவாரத்திற்கு பிறகு அழுகிய நிலையில் யானை மீட்பு!
TAGS :
COMMENTS