[ad_1]





தாயின் கண்ணீர், ஓர் இளைஞரை பயங்கரவாத இயக்கத்திலிருந்து மீட்டு வந்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் சேர்ந்த அந்த இளைஞர், மனம் திருந்தி போலீஸாரிடம் சரணடைந்துள்ளார்.






ஜம்மு-காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர், மஜித் இர்ஷத் கான் (வயது 20). வணிகவியல் பட்டதாரி. மாவட்ட அளவிலான கால்பந்து வீரராக இருந்தார். சமூக சேவைகள் செய்வதிலும் ஆர்வம் உடையவராக இருந்தார். நண்பரின் மரணம், இவருடைய வாழ்க்கையைத் திசை மாற்றியது. பயங்கரவாத இயக்கத்தில் ஆயுததாரியாக இருந்த இவருடைய நண்பர் யவார் நிஸார் ஷெர்குஜ்ரி, இந்திய ராணுவம் நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு வேட்டையில் கொல்லப்பட்டார். நண்பர் கொல்லப்பட்ட ஆத்திரத்தில், மஜித் இர்ஷத் கானுக்கு பயங்கரவாத இயக்கங்கள்மீது அனுதாபம் ஏற்பட்டது.அக்டோபர் மாதத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அவர், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தார்.  அவர், ஏ.கே. 47 துப்பாக்கியை வைத்துக்கொண்டு நிற்பது போன்ற ஒரு படத்தை அக்டோபர் 19-ம் தேதி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, அவர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தது உறுதியானது.தன் மகன் பயங்கரவாதியாக மாறியது மஜித் இர்ஷத் கானின் தாயார் ஆயிஷாவுக்கு கடும் மனவலியை ஏற்படுத்தியது. பயங்கரவாத இயக்கத்திலிருந்து வெளியேறி, தங்களுடன் வந்துவிடுமாறு கண்ணீர் மல்க பேசும் வீடியோ ஒன்றை ஆயிஷா வெளியிட்டார். அது, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. வீட்டுக்குத் திரும்பிவருமாறு பலரும் அவருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மனம் மாறிய மஜித் இர்ஷத் கான், பயங்கரவாத இயக்கத்திலிருந்து வெளியேறி, நேற்று மாலை போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");