[ad_1]
பிரதமர் மோடி இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒருநாள் பயணமாக, நாளை சென்னை வருகிறார்.
சென்னையில் நாளை தினத்தந்தி நாளிதழின் 75 -வது ஆண்டு விழா, சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அதன் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சோமநாதன் என்பவரின் மகளின் திருமண நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்.
இதற்காக காலை பத்து மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து தினத்தந்தி பவள விழாவில் கலந்து கொள்ள செல்கிறார். அதன் பின்னர் 11.30 முதல் 12 மணிக்குள் ராஜா அண்ணாமலைபுரத்தில் திருமண விழாவிலும் கலந்துகொள்ள உள்ளார். இவ்விரண்டு விழாக்களையும் முடித்துக்கொண்டு பகல் 12.45 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல உள்ளார். கடந்த வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிறகு தற்போது தான் சென்னை வருகிறார். பிரதமர் மோடி நாளை கடற்கரை சாலையில் பயணம் மேற்கொள்ள உள்ளதால், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்திகையும் பார்க்கப்பட்டது.
திங்கள்கிழமை என்றாலே சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது சகஜம். இதில் ஏதாவது வி.ஐ.பி கள், ஏதேனும் விழாக்களில் பங்கேற்க வருகை தந்தால், சென்னை வாகன ஓட்டிகளின் நிலைமை இன்னும் மோசம். நாளை பிரதமர் மோடி சென்னை வருவதால், காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். இதனால் பொதுமக்கள் அதற்கு ஏற்ப தங்களது பயண திட்டங்களை மாற்றி அமைத்து கொண்டால் அதிகம் பாதிப்பில்லாமல் செல்லலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஒருநாள் பயணமாக நாளை சென்னை வரும் பிரதமர் மோடி; போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு? #அலார்ட்
TAGS :
COMMENTS