[ad_1]
ஊட்டியில் நடைபெற இருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தேதி, ஆறாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, தமிழக அரசு, மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர், அது செப்டம்பர் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் 26, அக்டோபர் 9-ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, மழை வெள்ளம் காரணத்தால் டிசம்பர் 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஆறாவது முறையாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 10-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 5-ம் தேதி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள். இதையடுத்து, டிசம்பர் 7-ம் தேதி கொடிநாள் கடைபிடிக்கப்படுகிறது. தற்போதைய மாற்றத்துக்கு, இவை இரண்டும்தான் காரணங்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், டிசம்பர் 10-ம் தேதியுமே, ஊட்டியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவது சந்தேகம்தான் என்று அரசு வட்டாரங்களில் கூறுகின்றனர்.
ஏனென்றால், டிசம்பர் 9-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. எனவே, அதற்கு அடுத்த நாளே ஊட்டியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவது சந்தேகம்தான் என்று கூறியுள்ளனர்.
இதனிடையே, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்ந்து தள்ளிப் போவதால், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி நலத்திட்டப் பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற ஊட்டி மலர் கண்காட்சியில் பேசிய முதல்வர், ";2 கோடி ரூபாய் செலவில் ஊட்டி பேருந்து நிலையம் புனரமைக்கப்படும்"; என்று கூறினார். ஆனால், அவர் அறிவித்து ஆறு மாதங்கள் ஆகியும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
அதேபோல, மேட்டுப்பாளையம் சாலை காரமடை பாலம் உள்ளிட்ட திட்டப்பணிகளும் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தொடர்ந்து தள்ளிப்போகும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: முடங்கிப்போன நீலகிரி வளர்ச்சிப் பணிகள்!
TAGS :
COMMENTS