[ad_1]
மனிதர் ஒருவருக்கு நாய்க்குட்டி கை கொடுக்க மறுத்ததும், நாய்க்குட்டி கைகொடுத்தாலும் தாய் நாய், அதைத் தடுப்பதும் போன்ற வீடியோ இணையத்தில் உலா வந்துகொண்டிருந்தது. உரிமையாளருக்கு தன் குட்டி கை கொடுப்பதை தாய் நாய் தடுப்பதற்கு வேதனையான பின்னணியும் இந்தக் கதைக்கு உள்ளது.
பொதுவாக நாய்க் குட்டிகள் ஈன்றால், உரிமையாளர்கள் அதன் உணர்வைப் புரிந்துகொள்ளாமல் குட்டி நாய்களைச் சொந்த பந்தங்களுக்கு பரிசாக வழங்குவதும் விற்பனை செய்யும் நிலை உள்ளது. தாய் நாய் அதனால் படும் வேதனையை மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. திடீர் திடீரென்று தன் குட்டிகள் காணாமல் போவதால் தாய் நாய் வருத்தத்துடன் காணப்படும்.
சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தன் வீட்டு நாய் ஈன்றக்குட்டிகளைப் பக்கத்து வீட்டாருக்குத் தானம் செய்திருக்கிறார். அந்த கோபத்திலும் வருத்தத்திலும் தாய் நாய், குட்டி நாயை உரிமையாளரிடம் நெருங்க அனுமதிக்கவில்லை. 'எங்கே இந்தக் குட்டியையும் நம்மிடம் இருந்து பிரித்து விடுவாரோ' என்ற பயத்தில்தான் தன் குட்டியை அவருக்கு கை கொடுக்க அனுமதிக்கவில்லை என்ற விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ வைரலாகியுள்ளது. லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை கண்டுள்ளனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கைகொடுக்க மறுத்த நாய்க்குட்டி... பின்னணி என்ன?
TAGS :
COMMENTS