[ad_1]
தூய்மை நகரம் பட்டியலில் திருச்சி மாநகராட்சி முதலிடம் பிடிப்பதற்காக மக்களை ஊக்கப்படுத்துவதற்கா மாநகராட்சி சார்பாக லோகோ வெளியிடப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விருதைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளை திருச்சி மாநகராட்சி முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சியை தூய்மை மாநகரமாக மாற்றிடும் வகையில் திருச்சி நெ.1 எனும் லோகோவை திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டார். தூய்மை இந்தியா திட்டத்தில் கடந்த சில வருடங்களாக முதல் ஐந்து இடங்களுக்குள் திருச்சி மாநகராட்சி இடம்பிடித்தது. கடந்த 2016-ல் திருச்சி மாநகராட்சி இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்று பெருமை சேர்த்தது. மேலும் இந்த வருடம் தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 4,041 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்தத் திட்டத்தில் முதல் இடத்தை பெரும் வகையில் திருச்சி மாநகராட்சி சார்பில், திருச்சி முழுவதும் பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இதுதொடர்பாக கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கம், துண்டுபிரசுரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் இன்று செயற்பொறியாளர்கள் கண்ணன், செல்வம், மேலும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் யுகா பெண்கள் அமைப்பின் தலைவர் அல்லிராணி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் திருச்சி மாநராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், 2018-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் முதலிடத்தைப் பிடிக்கும் வகையில் செயல்படுத்தும் நோக்கத்துடன் திருச்சி நெ.1 எனும் லோகோ-வை வெளிட, அதை நகரப் பொறியாளர் அமுதவள்ளி பெற்றுக்கொண்டார். இறுதியாக மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன், “திருச்சி மாநகராட்சி இந்தியாவில் தூய்மை நகரமாக முதலிடத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வீடுகள்தோறும் துப்புரவு பணியாளர்கள் நேரடியாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கூடவே பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும், இல்லத்தரசிகளுக்கு குலுக்கல் முறையில் தங்கநாணயம் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றோம். மேலும் திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் தற்போதும், 40 சதவிகித பாதாளச் சாக்கடை இணைப்புகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பகுதிகளில் விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும்” என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
முதலிடம் பிடிக்க லோகோ வெளியிட்ட திருச்சி மாநகராட்சி..!
TAGS :
COMMENTS