[ad_1]

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருக்கும் சரித்திரப் படம் ‘சங்கமித்ரா’. ஆர்யா, ஜெயம் ரவி நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது. இதற்காக வாள் பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. திடீரென, ஸ்ருதிஹாசன் சங்கமித்ராவிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்தார். ஆனால், 'அவர் விலகவில்லை. படத்திலிருந்து அவரை நாங்கள் நீக்கிவிட்டோம்' என ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்தது.



எனவே, படக் குழுவினர் ஸ்ருதிஹாசன் இடத்தில் யாரை நிரப்ப இருக்கிறார்கள் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே நீண்ட நாள் இருந்தது. அதில், ஹன்சிகா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. கூடவே சங்கமித்ரா படம் ட்ராப் என்ற செய்திகளும் வெளிவந்தன.



இந்நிலையில், அப்படத்துக்கான கதாநாயகி 'தீஷா பதானி' என்ற அறிவிப்பை குஷ்பு சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். 'தீஷா பதானி' எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.