[ad_1]





'கலைப் படைப்பின் சுதந்திரத்தின்மீது வன்முறையைச் செலுத்துவதற்கு, அவர்களுக்கு யார் அனுமதிகொடுத்துள்ளார்கள்' என்று நடிகை தீபிகா படுகோன் கேள்வி எழுப்பியுள்ளார்.





தீபிகா படுகோன் நடித்துள்ள வரலாற்றுப் படம், 'பத்மாவதி'. விரைவில் வெளியாகவுள்ள அந்தப் படத்துக்கு, பயங்கர எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குஜராத் சூரத் நகரில்,  'பத்மாவதி' படத்தின் தீபிகா படுகோன் உருவத்தை ரங்கோலி கோலத்தில் வரைந்திருந்தார், ஓவியர் கரண். அங்கு வந்த வன்முறையாளர்கள், அந்த ரங்கோலி உருவத்தைச் சிதைத்தனர். மேலும், ஓவியரையும் தாக்கியுள்ளனர். அதற்குக் கண்டம் தெரிவித்து, தீபிகா படுகோன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



அவருடைய ட்விட்டர் பதிவில், 'ஓவியர் கரணின் கலைப் படைப்பின் மீதான தாக்குதலைப் பார்த்தவர்களின் இதயம் நொறுங்கிவிடும். யார் இவர்கள், கலைப்படைப்பின் சுதந்திரத்தின்மீது தலையிடுவதற்கு? இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்... அவர்கள் கையில் சட்டத்தை எடுத்துக்கொள்ள நாம் அனுமதிக்கப்போகிறோமோ? இன்னும் எத்தனை நாள்களுக்கு இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை பொறுத்துக்கொள்வோம். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவை, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு டேக் செய்துள்ளார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்