[ad_1]
திருச்சி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் மண்ணச்சநல்லூர், முசிறி, திருவானைக்காவல் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் சாலை மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோட்டப்பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, லெட்சுமிநாதன், நாகராஜன், உதவி கோட்டப் பொறியாளர்கள் ஹரிகிருஷ்ணன், ரங்கவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, “திருச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திருவானைக்காவல், சென்னை - திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள பழைமையான மற்றும் குறுகலான ரயில்வே பாலத்துக்குப் பதிலாக 43 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நான்குவழிச் சாலை மேம்பாலம் கட்டப்பட்டுவருகிறது. இந்த மேம்பாலப் பணியில் சென்னை – திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும், கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தட இணைப்பு பாலமாகவும் அமைக்கப்பட்டுவருகிறது. இப்பணியில் 75 விழுக்காடு பால வேலைகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நான்கு மாதங்களில் இப்பணி முடித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இதேபோல், திருச்சி நெடுஞ்சாலைக் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டத்தின் மூலம் திருச்சி – துறையூர் சாலையில் பாலங்கள் கட்டும்பணி உள்ளிட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் புள்ளம்பாடி வாய்க்காலின் குறுக்கே ஒரு சிறுபாலம் திரும்பக் கட்டும்பணி சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது. நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் மதிப்பில் தண்டலைப்புத்தூர் - திண்ணக்கோணம் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இப்பாலப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஏப்ரல் மாத இறுதிக்குள் இப்பணிகள் முடித்திட உத்தரவிட்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
திருச்சியில் நடைபெறும் நெடுஞ்சாலை பணிகள்குறித்து ஆட்சியர் ஆய்வு
TAGS :
COMMENTS