[ad_1]
மதுரையில் மீனாட்சியம்மை கோயில், அழகர்கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம், அரிட்டாபட்டி சிவன் கோயில் என்று சுற்றிப்பார்க்க இன்னும் பல இடங்களை அடுக்கலாம். தற்போது அந்த லிஸ்ட்டில் மதுரையின் பேமஸ் சுடுகாடன தத்தநேரி சுடுகாடும் வந்துவிடும் போல என்று நகைத்து ஆச்சிரியபட வைத்துள்ளது. அமெரிக்கச் சுற்றுலா பயணிகளான 10 பேர் கொண்ட குழு ஒன்று தொடர்ச்சியாக மதுரையைச் சுற்றிப்பார்த்து வருகின்றனர்.
அப்போது வைகை ஆற்றை ரிக்சா மூலம் பயணித்துக்கொண்டே பார்த்துள்ளனர். அப்போது தத்தநேரி சுடுகாட்டிற்கு இறுதி சடங்கு செய்ய ஒருவரின் உடலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் எடுத்து ஆட்டம், பாட்டத்தோடு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பறை இசையில் பரவசம் அடைந்த அந்த அமெரிக்க பயணிகள் இறுதிச்சடங்கு ஊர்வலத்திலும் கலந்து கொண்டுள்ளனர். தத்தநேரி சுடுகாட்டில் செய்த இறுதி சடங்குகளை கவனித்துள்ளனர். சுடுகாட்டில் முட்டி உடைப்பது, முடி இறக்குவது, வாய்க்கரிசு போடுவது என்று சுடுகாட்டில் நடந்த அத்துனை சடங்களையும் வியந்து பார்த்தனர்.
இந்த அமெரிக்க குழு தத்தநேரி சுடுகாட்டை சுற்றிப்பார்த்தது சுடுகாடு கூட சுற்றுலா ஸ்தலமாக மாறிவிட்டதா என்று தோன்றவைக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் அந்த அமெரிக்க சுற்றுலாக் குழுவை சேர்ந்த மேரிமோ கூறுகையில் "மதுரையில் இந்த இறுதிச்சடங்கை பார்த்தது மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. இறந்த உடலை கடவுள் போல மதித்து சடங்குகள் செய்ததில் கலாச்சாரத்தின் சாயல் வெளிப்பட்டது. தமிழர்களின் கலாச்சாரம் இறுதிச்சடங்கு வரை பயணிக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது' என்று தெரிவித்தார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மதுரையில் இறுதிச் சடங்கில் பங்கேற்று சுடுகாட்டைச் சுற்றிப் பார்த்த அமெரிக்க சுற்றுலாப் பயணிகள்..!
TAGS :
COMMENTS