[ad_1]

இந்த ஆண்டுக்கான தெற்கு ரயில்வே கால அட்டவணை வெளியாகியுள்ளது. ஆண்டு தோறும் ரயில்வே கால அட்டவணையில் கன்னியாகுமரி மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டம்  ரயில்வே கால அட்டவணையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். ஆண்டுதோறும் தெற்கு ரயில்வே, ரயில் கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.




கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ரயில்வே கால அட்டவணையில் பெரிய மாற்றங்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை. அதேசமயம் திருநெல்வேலியிலிருந்து காந்தி தாமுக்கு நாகர்கோவில் வழியாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் வாராந்திர ரயிலாக நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி சூப்பர் பார்ஸ்ட்  ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி சூப்பர் பார்ஸ்ட் ரயில் 20 நிமிடம் முன்னதாக இயக்கப்படுகிறது. அதுபோல சென்னை திருவனந்தபுரம் அனந்தபுரி ரயில் கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.