[ad_1]
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை சிறைபிடித்து சென்றுள்ளனர். 'இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்’ என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை மண்டபத்தில் உள்ள கடலோரக் காவல்படை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது என உறுதியளித்தனர். இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.
மீனவர்கள் நேற்று நள்ளிரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட படகுளில் இரூந்து கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். ஏற்கனவே இலங்கை சிறையில் 109 மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 8 மீனவர்களை இலங்கை படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது வேதனைக்குரியது. தமிழக மீனவர்கள் பிரச்னையை பொறுத்தவரை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படவில்லை. மீனவர்களின் கைதை தடுக்க இலங்கை கடற்படையின் நடவடிக்கையை முடக்கிவைப்பதே சரியாக இருக்கும்” என்றார்.
தொடர்ச்சியாக சிறைபிடிக்கப்படும் மீனவர்கள்: வருத்தம் தெரிவிக்கும் பொன்னார்
TAGS :
COMMENTS