[ad_1]
கடலூர் நகர சாலைகள் புழுதிப்படலமாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சரைக் கண்டித்து, பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவித்து, தி.மு.க-வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, ’'மாவட்ட தலைநகரம் மட்டுமல்ல, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சொந்தத் தொகுதி இது. அப்படியிருந்தும், ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கிறது. இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கரை இல்லை என்பதின் வெளிப்பாடுதான் இது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிறிது மழை பெய்தாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் அந்தக் குழிகளில் விழுந்து எழுந்து செல்கிறார்கள். பெற்றோர்கள் வாக்களித்தற்கு பிள்ளைகளுக்குத் தண்டனையா?. இவர்கள் மக்களுக்கான திட்டங்களை வகுப்பதில்லை. கொள்ளையடிப்பதற்கான திட்டங்களை வகுக்கிறார்கள்.
அவல நிலையில் கிடக்கும் சாலைகளில் பறக்கும் புழுதியால், பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதிலிருந்து அவர்களைக் காப்பாற்றத்தான் அவர்களுக்கு மாஸ்க் அணிவித்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆட்சியாளர்கள்தான் இப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால், மாவட்ட ஆட்சியரும் அப்படித்தான் இருக்கிறார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனுகொடுக்க உள்ளோம். அதற்குப் பின்னரும் மாவட்ட நிர்வாகம் சாலைகளைச் சீரமைக்கவில்லை என்றால், மக்களைத் திரட்டி, சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’' என்றார்.
’புழுதி பறக்கும் சாலைகள்’ - பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவித்து தி.மு.க. நூதனப் போராட்டம்!
TAGS :
COMMENTS