[ad_1]
”தற்போது நடந்து வரும் வருமான வரிச்சோதனைக்கும் அ.தி.மு.க அரசுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது” என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் நேற்று அதிகாலை 4 மணியிலிருந்து இரண்டாம் நாளான இன்றும் வருமான வரித்துறையினர் சோதனைநடத்தி வருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் எனக் கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூர், டெல்லி என 82 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இரண்டாம் நாளாக சோதனை நடைபெற்று வரும் வேளையில், அமைச்சர் ஜெயக்குமார், ”தற்போது நடந்து வரும் வருமான வரிச்சோதனைக்கும் அ.தி.மு.க அரசுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது. வருமான வரித்துறையினர் அவர்களுக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனையை நடத்தி வருகின்றனர்” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
”அ.தி.மு.க அரசுக்கும் வருமான வரிச்சோதனைக்கும் சம்பந்தம் கிடையாது”: அமைச்சர் ஜெயக்குமார்
TAGS :
COMMENTS