[ad_1]
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
கோயம்பேட்டில் கையகப்படுத்திய நிலத்தைத் திருப்பி அளிக்கவில்லை என்ற புகார் உள்ளதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நேரில் ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், நீதிமன்றம் குறிப்பிட்ட தேதியில் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராகவில்லை. இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், இன்று ஆஜராகும்படி கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, இன்று அவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தார். மேலும், இவருடன் தமிழகத்தின் முன்னாள் வீட்டு வசதித் துறைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் மற்றும் தற்போதைய வீட்டு வசதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரும் ஆஜராகினர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானது, நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நிலம் கையகப்படுத்திய விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரிஜா வைத்தியநாதன் ஆஜர்
TAGS :
COMMENTS