[ad_1]





Tiruppur: 

கணவன் மதுவுக்கு அடிமையாகிப்போனதால், விரக்தியடைந்த மனைவி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா. பின்னலாடை தொழிலாளியான இவருக்கு தீபா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மது குடிப்பழக்கத்துக்கு அடிமையான பாரதிராஜா, அதன் காரணமாக வீட்டில் தன் மனைவி தீபாவுடன் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி தன் நிறுவனத்தின் சம்பளத்தை பெற்றுக்கொண்டு, இரவு டாஸ்மாக் சென்று மது அருந்திவிட்டு வழக்கம்போல வீட்டுக்கு வந்திருக்கிறார் பாரதிராஜா.

சம்பளப் பணத்தில் மது குடித்துவிட்டு வந்ததால் கணவன்மீது தீபா கோபப்பட, பின்னர் இருவருக்குமிடையே  சச்சரவு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் பாரதிராஜா கழிவறைக்கு சென்றுவிட, அச்சமயம் பார்த்து, மனைவி தீபா தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார். உடல் முழுவதும் தீப்பற்றி எறிந்துகொண்டு இருந்த நிலையில், தீபாவின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்து தீபாவை காப்பாற்ற முயன்றுள்ளார் பாரதிராஜா. இதனால் அவரது உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


தீக்காயத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட தீபாவை மட்டும் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தீபா உயிரிழந்தார். அவரது கணவர் பாரதிராஜாவுக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");