[ad_1]

Chennai: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு வரும் 25 அல்லது 26-ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்படவிருப்பதாக அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் வெளியான செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 




 

அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது அணிகள் இணைந்தபின்னர், கட்சியிலிருந்து சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டும் நடவடிக்கைகளில் இருவரும் இறங்கினர். சென்னை வானகரத்தில் கடந்த செப்டம்பரில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோருக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். 
அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆர். மற்றும் தொலைக்காட்சியான ஜெயா டி.வி. போன்றவை சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றன. அந்த நாளிதழில் இன்று வெளியான ஒரு செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

’தமிழக அரசு கலைப்பா... ’ என்ற தலைப்பில் அந்த நாளிதழில் இன்று வெளியான செய்தியில், ’எடப்பாடி அரசு வருகிற 25 அல்லது 26ஆம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வரவிருப்பதாகத் தெரிகிறது. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளிட்ட 23 அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன. 





அமைச்சர்களின் பினாமி சொத்து உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆளுநர் வசம் உள்ளது. இதேபோல கடந்த 1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி தி.மு.க. ஆட்சியை இரவோடு இரவாகக் கலைப்பதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடவடிக்கை எடுத்தார். அப்போது ஆளுநரின் ஆலோசர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம், பி.கே. தவே போன்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அதேபோல், தற்போதும் ஆளுநரின் ஆலோசகர்களாக ராஜகோபால் மற்றும் சோமநாதன் போன்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதையறிந்த ஆளும் தரப்பினர் ஆதாரங்களை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நெருக்கடியை எப்படிக் கையாளுவது என்ற அதிர்ச்சியில் குழம்பிப் போயிருக்கிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");