[ad_1]
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இன்று நடைபெறவிருந்த தேசிய திறனறி தேர்வும் நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியிருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்து சேவையும், மழைநீர் தண்டவாளங்களில் தேங்கியிருப்பதால் மின்சார ரயில்களும் மெதுவாகவே இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில், தமிழகம் மற்றும் இலங்கைக்கு அருகே வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுநிலை நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், நவம்பர் 6-ம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
’தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு’: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TAGS :
COMMENTS