[ad_1]
நவம்பர் புரட்சியை முன்னிட்டு, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய செந்தொண்டர் அணிவகுப்பு மற்றும் உறுதிமொழியேற்பு பொதுக்கூட்டம் இன்று அமர்க்களமாக நடந்தது.
காரல்மார்க்சிஸ் 200-வது பிறந்தநாள் விழா மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு நிறைவுநாள் மற்றும் தீக்கதிர் நாளிதழ் சந்தா ஒப்படைப்பு ஆகிய மூன்று நிகழ்வையும் சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாடியது மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி. கோவை சிவானந்தா காலனியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட செந்தொண்டர்கள் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் நூறு செங்கொடிகளோடு அணிவகுத்தனர். இதில் நூற்றுக்கணக்கான செந்தொண்டர்கள் மதவெறியை மாய்ப்போம், மார்க்சியத்தை உயர்த்திப்பிடிப்போம் முன்னேறுவோம்; வெற்றி பெறுவோம் என்கிற ஆவேச முழக்கங்கள் எழுப்பியவாறு செங்கொடி ஏந்தி வீறுநடை போட்டபடி அணிவகுத்தனர். இதனைத்தொடர்ந்து மேற்கு மாவட்டத்தின் ஜமாப் இசை முழங்க தலைவர்கள் செஞ்சட்டை அணிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியில் அணிவகுத்தனர். கோவையின் பிரதான சாலை வழியாக சென்ற பேரணி ஆறுமுக்கில் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற உறுதிமொழியேற்பு பொதுக்கூட்டத்திற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நவம்பர் புரட்சி நூற்றாண்டு..! கோவையில் செஞ்சட்டையுடன் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பேரணி
TAGS :
COMMENTS