[ad_1]
நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், திரைப்படத் தயாரிப்பாளருமான அசோக்குமார் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்னையில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம், திரைப்பட உலகில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இரவு அசோக்குமாரின் உடல் சொந்த ஊரான மதுரைக்குக் கொண்டுவரப்பட்டது.
அஞ்சலி செலுத்த விஷால், அமீர், சமுத்திரகனி, கருணாஸ் ஆகியோர் மதுரை வந்திருந்தனர். இறுதி அஞ்சலிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் பேசும்போது,
"அசோக்குமார் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் அனைவருக்கும் தெரியும். கந்துவட்டியினால் பொதுமக்கள் பாதிக்கபட்டு வருகின்றனர். தற்சமயம் தயாரிப்பாளார் பலி ஆகியுள்ளார். சக தயாரிப்பாளராகக் கடன் வாங்கித் தொழில் செய்பவனாகச் சொல்கிறேன். திரைப்பட உலகில் இதுதான் கடைசி மரணமாக இருக்கும். இந்த மாதம் வட்டி கட்ட முடியவில்லையென்றால் எங்கேயும் ஓட மாட்டோம். அடுத்த மாதம் செலுத்துவோம். தயாரிப்பாளர் சங்கத் தலைவராகச் சொல்கிறேன்... கந்து வட்டிக்குக் கொடுத்து விட்டு மிரட்டினால் இனி சும்மா இருக்க மாட்டோம். போலீஸை நாடுவோம். உறுதியாகச் சம்பந்தபட்டவர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவோம். இந்தப் பட்டியலில் கெளதம்மேனன், பார்த்திபன் நான் உட்பட பலர் உள்ளோம். வெற்றுப்பத்திரத்தில் கையெமுத்துப் போட்டுள்ளோம். அன்பு செழியனுக்குச் சாதகமாக எம்.எல்.ஏ., வந்தாலும். அமைச்சர் வந்தாலும் விட மாட்டோம். இதுவரை அன்புச் செழியன் கைது செய்யப்படமால் இருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. அரசு சரியாக நடக்குதா இல்லையா என்பதைப் பார்ப்போம். முறையாக இந்த விஷயத்தில் முதல்வரைச் சந்திப்போம். எந்த அமைப்பிலும் ஒரு மரணத்துக்குப் பின்னால் புரட்சி வெடிக்கும். இப்போது எங்களிடம் வெடித்துள்ளது. அனைத்துத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஒன்று சேர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். அசோக்குமார் தற்கொலை மூலம் சினிமாத் துறையில் உள்ள கந்துவட்டிக் கொடுமை இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனி படம் பண்ணும் யாருக்கும் ரெட் கார்டு, லொட்டு லொசுக்கு எதுவும் வரக் கூடாது" என்று ஆவேசமாகப் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`அன்புச் செழியனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., மந்திரி என யார் வந்தாலும் விடமாட்டோம்!' - விஷால் ஆவேசம்
TAGS :
COMMENTS