[ad_1]
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் மெர்சல் படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், தற்போது படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல் தொடர்கிறது.
பொதுவாகவே, நடிகர் விஜய் படங்களுக்கு சிக்கல் வருவது தொடர்கதை தான். ஒவ்வொரு முறையும் பல தடைகளை தாண்டி தான் அவரது படங்கள் வெளியாகும். தற்போது தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட மெர்சல் படத்திற்கும் பல தடைகள் வந்த வண்ணம் இருகிறது. மெர்சல் தலைப்புக்கு வந்தது முதல் சிக்கல். நீதிமன்றம் வரை சென்று தலைப்புக்கு போடப்பட்ட இடைக்கால தடையை வென்றது.
முதல் சிக்கல் தீர்ந்தபின்னர், திரையரங்கு டிக்கெட் பிரச்னை தொடங்கியது. கேளிக்கை வரியை குறைக்கும் வரை புதிய படங்கள் வெளியாகாது என அறிவிப்பு வெளியானது. இதனால் மீண்டும் மெர்சல் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் வந்தது. எனினும் தடைகளை தாண்டி படம் தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தெரிவித்து வந்தார். இந்நிலையில், இன்று கேளிக்கை வரியை 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என விஷால் தெரிவித்தார்.
இதனால் ரசிகர்கள், மெர்சல் வெளியாவதை கொண்டாட தொடங்கினர். சென்னையில் இன்று சில திரையரங்குகளில் மெர்சல் படத்துக்கான முன்பதிவு கூட தொடங்கியது. இந்நிலையில் படத்துக்கு புதிய சிக்கல் விலங்கு நல வாரியம் மூலம் தொடங்கி உள்ளது. படத்தில் விஜய் மேஜிக்மேன் ஆக வரும் காட்சியில் பயன்படுத்தும் புறா கிராபிக்ஸ் என்னும் ஆதரங்களை படக்குழு இன்னமும் சமர்பிக்கவில்லை. இதனால் இதுவரை விலங்கு நல வாரியத்திடம் இருந்து தடை இல்லா சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.
இன்று விலங்கு நல வாரியம், தணிக்கை குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தடை இல்லா சான்றிதழ் வழங்கபடாத நிலையில் தணிக்கை சான்றிதழ் எப்படி வழங்கினீர்கள்? என விளக்கம் கேட்டுள்ளது. இதனால் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தொடரும் மெர்சல் சிக்கல்; தணிக்கை குழுவிடம் விளக்கம் கேட்கிறது விலங்கு நல வாரியம்!
TAGS :
COMMENTS