[ad_1]

Tiruppur: 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர் ஒருவரின் இரண்டு சக்கர வாகனம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே காணாமல்போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். 32 வயதான இவர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சி - பிரிவில், வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய வீடு திருப்பூர் மாநகரப் பகுதியில் உள்ள குமார்நகர் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது.

தினமும் இரு சக்கர வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வேலைக்குச் சென்று வருவது செந்தில்நாதனின் வழக்கம். இந்நிலையில் நேற்றைய தினமும் வழக்கம்போல தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு வந்துள்ளார் அவர். நேற்றைய தினம் திங்கட்கிழமை என்பதால், மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏராளமான பொதுமக்கள் வந்திருக்கிறார்கள். மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்ட ஆட்சியரகத்தின் பின்புற நுழைவு வாயில் பகுதியில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அலுவலகத்துக்குள் வேலைக்குச் சென்றுவிட்டார் செந்தில்நாதன்.


பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டுக்குச் செல்வதற்காக வாகனத்தை எடுக்க வந்தவர், தான் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் வாகனத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பின்னர் சில மணி நேரங்கள் ஆட்சியரக வளாகம் முழுவதும் வாகனத்தை தேடியும் கிடைத்தபாடில்லை. பின்னர் வீரபாண்டி பகுதி காவல்நிலையத்தில் செந்தில்நாதன் புகார் அளிக்க, அதன்பிறகு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");