[ad_1]
Puducheri: ”சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறையைக் கையில்வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளின் ஆட்சியை முடக்க நினைக்கிறது மத்திய பா.ஜ.க அரசு” எனப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தாள் விழா, புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. புதுச்சேரியின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “மக்களை ஏமாற்றித்தான் மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.மேலும், மக்கள் விரோத பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதேபோல, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் விவசாயம் மற்றும் தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு, எதிர்க்கட்சிகளை எதிர்க்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறது. புதுச்சேரி மாநிலத்துக்கு நிதி கேட்டு, இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை மத்திய அரசை அணுகியும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஆளுநர்களைக்கொண்டு ஆட்சியை முடக்க நினைக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. அதேபோல எதிர்க்கட்சிகளை சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறைமூலம் முடக்கவும் முயற்சி செய்கிறது. ஆனால், அதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அஞ்சாது. மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். ராகுல் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்கும் காலம் நெருங்கிவிட்டது. புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் பிரச்னைகளுக்காகப் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் கதவுகளைத் தட்டிவிட்டோம். எதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம்” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
வருமான வரித்துறைமூலம் ஆட்சியை முடக்க நினைக்கிறது பா.ஜ.க - நாராயணசாமி ஆவேசம்
TAGS :
COMMENTS