[ad_1]
"கீறல் விழுந்த, உடைந்த பழைய லேப்டாப்புகளை எங்களுக்கு வழங்கி இருக்காங்க. கிராமப்புற மாணவர்கள் என்பதால் இப்படி வழங்கினார்களா, இல்லை எங்களுக்கு டெக்னாலஜி தெரியாதுன்னு பழசுபட்ட லேப்டாப்புகளை வழங்கினார்களான்னு தெரியலை. ஆனால், மற்ற பள்ளி மாணவர்களுக்கு கொடுத்ததுபோல புதுசான லேப்டாப்புகளை கொடுத்தால் வாங்கிக்கிறோம். இல்லைன்னா,இந்த பழைய லேப்டாப்புகளை நீங்களே வச்சுக்குங்க" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் ஒரு அரசு பள்ளி மாணவர்கள் வழங்க, அவர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது செங்குளம். இந்த கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 75 பேரும் திரண்டு வந்து, கையோடு கொண்டு வந்த லேப்டாப்புகளை கலெக்டர் கோவிந்தராஜிடமும், மாவட்ட கல்வி அதிகாரி அய்யண்ணனிடமும் திருப்பி வழங்க முயல, அவர்கள் இருவரும் ஜெர்க்காகினர். அதில், அய்யண்ணரசு மாணவர்களிடம், மிந்த லேப்டாப்புகளுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எங்களிடம் ஏன் வந்து கொடுக்கிறீர்கள்?" என்று கேட்க, மாணவர்களின் கோபம் இருமடங்கானது. "புது லேப்டாப்புகள் தரும் வரை இது எங்களுக்கு வேண்டாம்" என்று மல்லுக்கட்டினர்.
அப்போது பேசிய அந்த பள்ளி மாணவியான காருண்யா, "2016-2017 கல்வியாண்டிற்கான லேப்டாப்புகளை இரண்டு நாள்களுக்கு முன்பு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். எங்கள் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு மட்டும் புத்தம் புதிய லேப்டாப்புகளை போட்டோவுக்கு போஸ் கொடுக்க அமைச்சர் வழங்கினார். மீதமுள்ள 73 மாணவ, மாணவிகளுக்கும் பள்ளி ஆசிரியர்களே வழங்கினார்கள். புத்தம் புதிய லேப்டாப்புகளில் வைபை வசதி, கேமரா வசதி, சி.டி போடும் வசதி எல்லாம் இருக்கும்ங்கிற ஆர்வத்தோடு போய் வீட்டுல எல்லோரும் பிரிச்சு பார்த்தா,73 லேப்டாப்புகளும் கீறல் விழுந்த, உடைந்த பழைய லேப்டாப்புகளா இருந்துச்சு. பலது இயங்கவே இல்லை. வைபை வசதி ஒரு லேப்டாப்புகளிலும் இயங்கலை. எங்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்புகள் அனைத்தும் 2012 மற்றும் 2015 வருடங்களில் வழங்கப்பட்டவை. அவைகளை கைப்பற்றி எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். இதனால், எங்களுக்கு கோபமாயிட்டு. எங்களுக்கு அமைச்சர் லேப்டாப்புகள் வழங்கிய தினத்தில்தான் தரகம்பட்டி, தோகைமலை அரசு பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா லேப்டாப்புகளை அமைச்சர் வழங்கினார். அவை அனைத்தும் புத்தம் புதியவை. ஆனால், எங்கள் பள்ளிக்கு மட்டும் 'பழசுபட்டை' லேப்டாப்புகளை அமைச்சர் வழங்கி இருக்கிறார். நாங்களும் அரசு பள்ளி மாணவர்கள்தான். நாங்க கிராமப்புற மாணவர்கள், டெக்னாலஜி தெரியாத மாணவர்கள்ன்னு நினைச்சு, எங்களுக்கு பழைய லேப்டாப்புகளை வழங்கி இருக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு டெக்னாலஜி தெரியும். அதனால்தான், பழசுபட்ட லேப்டாப்புகளை கொடுத்து எங்களை ஏமாற்றப் பார்த்ததை கண்டித்து, எங்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவரிடமும், மாவட்ட கல்வி அலுவலரிடம் திருப்பி கொடுக்க வந்தோம். அவர்கள் எங்களிடம் வாங்கிக் கொள்ளவில்லை. அவர்கள் வாங்க மறுத்தால், எங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இந்த 'கந்தல்' லேப்டாப்புகளை திருப்பி வழங்கலாம்ன்னு இருக்கோம். கிராமப்புற அரசு மாணவர்களை இந்த அரசு இந்த லட்சணத்தில்தான் எடைபோடுகிறது? கிராமப்புற மாணவர்கள்ன்னா அவ்வளவு மட்டமா? நாங்க இதை சும்மா விடபோவதில்லை" என்று ஆவேசமாக பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`கீறல் விழுந்த லேப்டாப்புகள் எங்களுக்கு வேண்டாம்!' - கலெக்டரை அலற வைத்த மாணவர்கள்!
TAGS :
COMMENTS