[ad_1]
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது. இன்றுடன் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், `விபசாரம் மற்றும் மனிதக் கடத்தல் போன்றவை பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் குறைந்துள்ளது' என்று கூறியுள்ளார்.
மேலும், `பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விபசாரம் மற்றும் மனிதக் கடத்தல்கள் இந்திய அளவில் குறைந்துள்ளது. பெருமளவிலான பணம் இங்கிருந்து நேபாளத்துக்கும் வங்கதேசத்துக்கும் சென்றுகொண்டிருந்தன. ஆனால், இந்த வர்த்தகம், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் குறைந்துள்ளது. அதேபோல, இந்நடவடிக்கைக்குப் பின்னர்தான், காஷ்மீரில் கல் எறியும் சம்பவங்கள் குறைந்துள்ளன. இது, நேர்மையாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. இந்நாளை, அதற்காகவே நாங்கள் கொண்டாடுகிறோம். ஆனால் காங்கிரஸ், அதை கறுப்பு தினமாக அனுசரிக்கிறது. நேர்மையைப் பார்த்து காங்கிரஸ் ஏன் எரிச்சலடைகிறது' என்று கூறியுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பண மதிப்பிழப்பு அமல்படுத்திய நாளை கறுப்பு தினமாக அனுசரித்துவருகிறது. அதே வேளையில், மத்திய அரசு இன்று, `கறுப்புப் பண எதிர்ப்பு நாளாக'க் கடைபிடித்துவருகிறது.
பண மதிப்பிழப்பால் இவையெல்லாம் குறைந்துள்ளன! மத்திய அமைச்சரின் பகீர் கருத்து!
TAGS :
COMMENTS