[ad_1]





அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஷிஃபாலி ரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 





38 வயதான ஷிஃபாலி ரங்கநாதன் சியாட்டிலில் பொதுப்போக்குவரத்துக்கான கொள்கை வகுக்கும் கூட்டமைப்பின் செயல் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தற்போது சியாட்டில் நகர துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷிஃபாலியின் தந்தை பிரதீப் ரங்கநாதன். தயார் செரில். ஷிஃபாலி நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு கான்வென்ட் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன்பின்னர் அண்ணாப் பல்லைக்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். 2001-ம் ஆண்டில் அமெரிக்கா சென்று அங்குள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார். படித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு அரசு வேலைக்கு அழைப்பு வந்துள்ளது. சியாட்டில் போக்குவரத்துக் கொள்கை வகுப்புக் கூட்டமைப்பில் இயக்குனராக வேலைக்குச் சேர்ந்த அவர் 2014-15-ம் ஆண்டில் செயல் இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், துணை மேயர் கௌரவம் அவரைத் தேடி வந்துள்ளது.ஷிஃபாலியின் கடின உழைப்பும், முயற்சிகளுமே அவரை இந்த நிலைக்கு உயர்த்தி இருப்பதாக மகளை நினைத்து மகிழ்கிறார் தந்தை பிரதீப் ரங்கநாதன்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");