[ad_1]





Puducheri: ”அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களைவிட எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டுவருகிறது” என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.





மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. குழந்தைகள் மீது  அவர் கொண்டிருந்த அளவுகடந்த அன்பின் காரணமாக, அவரது பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. புதுச்சேரியில், பாரதி பூங்கா எதிரில் உள்ள நேரு சிலைக்கு இன்று முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர். அதேபோல, புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் நேருவின் பிறந்தநாள், குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அரியாங்குப்பம் பாண்டுரங்கா திருமண நிலையத்தில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார்.அப்போது பேசிய அவர், “அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் புரியும். இனிவரும் காலங்களில், கல்வித்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்படும். நிதி பற்றாக்குறையால் பள்ளிக் கட்டடங்களைப் புணரமைக்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களைவிட எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டுவருகிறது. அதேபோல, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வியுடன் அனுபவமும் சேர்ந்தே வளரும். 12,50,000 ரூபாய் செலவில், தொண்டு நிறுவனங்கள்மூலம் 50 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் விரைவில் துவக்கப்படும்” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");