[ad_1]
Karur:
டெங்கு தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுப் பணிக்குப் போன கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பகுதி மக்கள், 'எங்கள் பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால், குப்பை கூளங்களால் மூடப்பட்டுக் கிடக்கு. அதைத் தூர் வாருங்க சாமி...' என்று கைகூப்பி கோரிக்கை வைக்க, ஸ்பாட்டிலேயே அதிகாரிகளை வரவழைத்து நீண்டகாலமாக தூர் வாரப்படாத அந்த இரட்டை வாய்க்காலை தூர் வார நடவடிக்கை எடுத்திருக்கிறார், மாவட்ட ஆட்சித்தலைவர். கரூர் நகருக்குள் ஓடும் இரட்டை வாய்க்கால், செல்லாண்டிபாளையம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் வெள்ளியணை சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் தரைத்தளத் தொட்டிகள்,சின்டெக்ஸ் தொட்டிகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள தண்ணீர்த் தொட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போதுதான், 'இரட்டை வாய்க்காலைத் தூர் வார வேண்டும்' என்று மக்கள் கோரிக்கைவைக்க,அதிகாரிகளை அலர்ட் செய்து ஸ்பாட்டில் இருந்தபடியே, இரட்டை வாய்க்காலை உடனே தூர் வார நடவடிக்கை எடுத்தார். அதேபோல ,தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் வெள்ளியணை சமத்துவபுரம் பகுதியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடம், அந்தப் பகுதி மக்கள் தெருவிளக்கு வசதி, குடிநீர் தடையின்றி வழங்கிட கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அதுசம்மந்தப்பட்ட அதிகாரிகளை ஸ்பாட்டில் இருந்தபடியே வரவழைத்த மாவட்ட ஆட்சித்தலைவர், மக்கள் விடுத்த கோரிக்கைகளை இன்றே சரிசெய்திட வேண்டும் என உத்தரவிட்டார்.மேலும், சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்திட உத்தரவிடப்பட்டு பணிகள் உடனடியாகத் துவக்கியும் வைக்கப்பட்டது. பின்னர், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சுகாதார முகாமைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்படுவதையும் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தினார். இந்த ஆய்வின்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ், "கரூர் நகரத்தின் மையப் பகுதியின் வழியாக செல்லக்கூடிய இரட்டை வாய்க்கால், நகரில் உள்ள கழிவுநீரை வெளியேற்றும் கால்வாயாக உள்ளது. இந்த வாய்க்கால், நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருப்பதாகவும், தினசரி மார்க்கெட் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுக் கழிவுநீர் வெளியேறாமல் உள்ளதாகவும், அதனால் பெரும் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று உடனடியாக வாய்க்கால் தூர்வாரப்பட்டு சரிசெய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முதற்கட்டமாக காமராஜ் பகுதியில் ஏற்பட்ட அடைப்பு நீண்டகாலமாக நீக்கப்படாமல் இருந்து,தற்போது கழிவுநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்க்கால் தூர் வாரப்பட்டு, அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. பொதுமக்கள் குப்பைகள், பாலித்தீன் பைகள் போன்றவற்றை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். கழிவுநீர் வாய்க்கால்களில் போடக்கூடாது. குறிப்பாக , காமராஜ் தினசரி மார்க்கெட் பகுதிகளில் உள்ளவர்கள், கண்டிப்பாக குப்பைகளை இரட்டை வாய்க்காலில் போடக்கூடாது. அதேபோல,பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வைக்கும் கோரிக்கைகள், உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கோரிக்கை வைத்த மக்கள்! - ஸ்பாட்டிலேயே நிறைவேற்றிய கலெக்டர்!
TAGS :
COMMENTS