[ad_1]
மியான்மரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பான விவகாரம் இன்னும் கனன்றுகொண்டிருக்கும் சூழலில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண, மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் ஆங் சாங் சூகியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறைக்கான தலைவர் ஃபெட்ரிகா மோகிரினி, சில நாள்களுக்கு முன்னர், ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் அகதிகள் முகாம்களை, வங்கதேசம், ஜப்பான், ஸ்வீடன் மற்றும் ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `சூகியை நேரில் சந்தித்து ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்னைக்குத் தீர்வுகாண, பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இந்த விஷயத்தில், மியான்மர் மீது அழுத்தத்தைப் போடுவதைவிட, பிரச்னைக்கு என்ன தீர்வு என்று காண்பதில்தான் முனைப்பாக இருக்கிறோம், ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்கவைக்கப்படிருக்கும் அகதிகள் முகாமில் சிறுவர்கள், குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் காட்சி ஒரு தாயாக என்னை மிகவும் பாதித்துள்ளது' என்று கூறியுள்ளார். மியான்மர் ராணுவம் ரோஹிங்யா முஸ்லிம்களை குறிவைத்துத் தாக்குவதால், இதுவரை 6,50,000 பேர் அந்நாட்டிலிருந்து வெளியேறி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ரோஹிங்யா முஸ்லிம் விவகாரம்: தீர்வுகாண சூகியுடன் பேச்சுவார்த்தை!
TAGS :
COMMENTS