[ad_1]
'துருவங்கள் பதினாறு' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் எடுக்கும் திரைப்படம், 'நரகாசூரன்.' இந்தப் படத்தில், அரவிந்த் சுவாமி, இந்திரஜித், சந்தீப் கிஷண் என மூன்று கதாநாயகர்கள் நடிக்கின்றனர். மேலும், படத்தின் நாயகியாக ஸ்ரேயா மற்றும் 'மீசையை முறுக்கு' படத்தில் நடித்த ஆத்மிகா நடிக்கின்றனர்.
கெளதம் மேனன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கான ஷூட்டிங் மலைப் பிரேசங்களில் பரபரப்பாக நடந்துவருகிறது. படத்துக்கான ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிந்திருக்கும் நிலையில், படத்தைப் பார்க்க ஆர்வமாகயிருப்பதாக கெளதம் மேனன் ட்விட் தட்டியிருந்தார்.
இந்நிலையில், தற்போது இயக்குநர் கார்த்திக் நரேன் படத்தின் போஸ்டர் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அரவிந்த் சுவாமி மற்றும் ஸ்ரேயா கேரக்டர் பெயர், துருவா மற்றும் கீதா என்றும் சந்தீப் கிஷண் மற்றும் ஆத்மிகா கேரக்டர் பெயர் வினய் மற்றும் தரணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
'நரகாசூரன்' படத்தின் போஸ்டர்ஸ் வெளியீடு
TAGS :
COMMENTS