[ad_1]





நாடு முழுவதும் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்த தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) எனும் புதிய அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 





தன்னாட்சி அதிகாரம்கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட இருக்கும் தேசியத் தேர்வு முகமை, முதற்கட்டமாக சி.பி.எஸ்.இ நடத்தும் நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை ஏற்கும். படிப்படியாக நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இருமுறை இதுபோன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், இணையதளம் மூலம் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான தேர்வு மையங்கள், நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் தோறும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம், சுமார் 40 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படும் கல்வியாளர் ஒருவர் செயல்படுவார். முதற்கட்டம் அந்த அமைப்புக்காக ரூ.25 கோடி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய அளவிலான மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுகளை நடத்தும் சி.பி.எஸ்.இ அமைப்பு, குறிப்பிட்ட பாடத்திட்டத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து வினாக்களைத் தேர்வுசெய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வைப் போலவே, அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்விக்கும் நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");