[ad_1]
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு ஆலோசனை ஒன்றை வழங்கியிருப்பது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
டெல்லியில், கடந்த சில தினங்களாக காற்று மாசு அதிகரித்துவருகிறது. இதையடுத்து, அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு அருகே அமைந்திருக்கும் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அறுவடைக்குப் பின் மிஞ்சும் காய்ந்த பயிர்களை விவசாயிகள் விவசாய நிலத்திலேயே தீயிட்டு எரித்துவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் புகையும் டெல்லியில் காற்று மாசுபாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. 'பஞ்சாப் அரசு இதைக் கட்டுப்படுத்த வேண்டும்' என்று ட்விட்டரில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பதிவிட்டார். இதையடுத்து, அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும் ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்த விவாதத்தின்போது, கெஜ்ரிவாலை ஆதரித்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, தங்கள் பகுதியில் விவசாயிகள் பயிர்களை எரிப்பதைத் தடுக்க எடுத்துவரும் நடவடிக்கைகள்குறித்து பஞ்சாப் முதல்வருக்கு தெரியப்படுத்தி உள்ளது. அந்த மாநில அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து இந்த ட்வீட் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் விவசாயிகள் அறுவடைக்குப்பின் பயிர்களை எரிக்கத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதை பஞ்சாப் அரசும் செயல்படுத்தும் என்று நம்புவதாகவும் அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது. ஒரு இணையதளச் சுட்டியையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு தன் ட்வீட்டில் இணைத்துள்ளது. யார் இந்த ட்வீட்டை வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை. இது, தற்போது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
பஞ்சாப் முதல்வருக்கு பாகிஸ்தானில் இருந்து ஆலோசனை!
TAGS :
COMMENTS