[ad_1]







சிங்கம்புணரி அருகே செல்லியம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளை பாலியல் சீண்டல் செய்த தலைமை ஆசிரியர் லாரன்ஸ் எட்வர்டு, குற்றத்தை மறைக்க முயன்ற கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள பாதுகாப்பு நல அதிகாரிகள் ஜெயபிரகாஷ், முத்துஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, `வழக்கில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பள்ளியிலேயே பயமற்ற முறையில் விசாரணை செய்ய வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்துத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.


போராட்டத்தில் மாநிலத் தலைவர் வாலன்டினா, மாநில பொருளாளர் மல்லிகா, மாவட்டத்தலைவர் காந்திமதி, மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியா, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன், கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன், பாக்கியலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்