[ad_1]





Chennai: மெர்சல் திரைப்பட விவகாரம் குறித்து அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. 




மெர்சல் படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வெளியான பின்னர் படம் குறித்த சர்ச்சைகள் அதிகரித்தது. படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என பா.ஜ.க-வினர் கோரிக்கை விடுத்துவந்தனர். 

இந்நிலையில் படத்தில் மருத்துவம் குறித்து தவறான தகவல் கூறப்படுள்ளதாக மருத்துவர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அரசு சாரா மருத்துவர்கள் சங்கச் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன், “மெர்சல் படத்தில் மருத்துவத் துறையைத் தவறாகச் சித்திரித்து காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ பரிசோதனையே ஓர் ஊழல், நீங்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் போனால் ஏதாவது நோய் எனச் சொல்லிவிடுவார்கள் எனத் தவறான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விஜய்க்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்கள் இதை நம்பிவிடுவார்கள். இந்தக் காட்சியைப் படத்திலிருந்து நீக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் தப்புகள் நடக்கின்றன. அதை வைத்துக்கொண்டு, தியாகத்தை மறைப்பது சரியானதாக இருக்காது. அந்தக் காட்சியை நீக்காவிட்டால், நீதிமன்றம் போய்ச் சட்டப்படிப் போராடுவோம்” எனத் தெரிவித்தார். 


முன்னதாகப் பத்திரிகையாளர்களுக்கும் கார்த்திகேயனுக்கும் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்கள் மருத்துவத்துறையில் நடக்கும் பல முறைகேடுகள் குறித்து சரமாரி கேள்விகள் எழுப்பினர்.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்