[ad_1]
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடல்பகுதியில் திமிங்கலம் ஒன்று காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
மன்னார் வளைகுடா பகுதி கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. இந்த கடல் பகுதியில் 3600-க்கும் மேற்பட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடல் மாசு, பருவ நிலை மாற்றம் போன்றவற்றில் இருந்து இந்த உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் தேசிய கடற் பூங்காவாக இப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கடல்வாழ் உயிரினங்கள் சில அவ்வப்போது இறந்து கரை ஒதுங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரை பகுதியில் நேற்று அரியவகை 'அம்மணி உழுவை' வகையைச் சேர்ந்த திமிங்கலம் ஒன்று காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் மன்னார் வளைகுடா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கறுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடனும் காணப்பட்ட இந்த திமிங்கலம் ஆழ்கடலில் மட்டுமே வசிக்கக் கூடியது. கப்பல்களிலோ அல்லது பாறையில் மோதியோ இந்த திமிங்கலம் இறந்திருக்கலாம் எனவும், தட்பவெப்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும் போதும் இதுபோன்ற பெரிய மீன் இனங்கள் திடீர் இறப்பைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது எனவும் வனத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த மன்னார் வளைகுடா வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட திமிங்கலம் பின்னர் கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்டது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சாயல்குடி அருகே இறந்து கரை ஒதுங்கிய அரியவகை திமிங்கலம்!
TAGS :
COMMENTS