[ad_1]
ரயில்வேயில் காவலராகப் பணிபுரியும் அண்ணன், தனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் பணம் பறித்துவிட்டதாக தம்பி ஒருவர் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம் புகார் கொடுத்தார்.புகார் அளித்த குமாரிடம் கேட்டபோது, 'நான் சேலம், ஓமலூர் மானத்தாள் அருகே எம்.ஓலைப்பட்டியில் குடியிருக்கிறேன். எனக்கு முதளிதரன் என்ற மகனும் சூர்யகலா என்ற மகளும் இருக்கிறார்கள். மகள் சூர்யகலா வாய் பேச முடியாத ஊமைப் பெண். என் மகன் முரளிதரன் தொழிற்கல்வி (டி.எம்.இ.,) முடித்திருக்கிறார். என் உடன் பிறந்த அண்ணன் வெங்கடாஜலம் ரயில்வே போலீஸாகத் தருமபுரியில் வேலைப் பார்த்துவருகிறார். என் மகன் முரளிதரனுக்கு ஆய்வக உதவியாளர் பதவி வாங்கித் தருவதாக என் அண்ணன் வெங்கடாசலமும் அவர் மனைவி அன்னப்பூரணியும் கூறினர். இதையடுத்து, அவர்களிடம் நான் ரூ.2,30,000-ம் தொகையும், எங்க பக்கத்து ஊரைச் சேர்ந்த, என் நண்பன் முருகேசன் வேலைக்காக ரூ.4,20,000-ம் தொகையும் என மொத்தம் ரூ.6,50,000-ம் தொகையை 2 தவணையாக கடந்த 2015-ம் ஆண்டு மே மாதத்தில் கொடுத்தோம்.
வேலை கிடைக்காத நிலையில் ஆறு மாதம் கழித்து எனக்கு ஒரு லட்சமும் முருகேசனுக்கு ரூ.1.5 லட்சமும் திருப்பிக் கொடுத்தார்கள். மீதித் தொகையை இன்னும் கொடுக்காமல் ஏமாற்றிவருகிறார்கள். காவல்துறையின் உயர் அதிகாரிகளிடம் சொல்லியும் என் அண்ணன் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை' என்றார்.
இதுபற்றி வெங்கடாசலத்திடம் கேட்டதற்கு, 'இது அனைத்தும் உண்மை. ஆனால், குமார் என்பவன் என் தம்பி கிடையாது. அவனை காவிரியில் தலை முழுகிவிட்டேன். என் மனைவி அன்னப்பூரணி, முருகேசன், குமார் ஆகியோர் லேப் டெக்னீஷியன் வேலை வேண்டி சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள மார்கண்ட விலாஸ் பாத்திரைக்கடை உரிமையாளர் கிருபாகரனிடம் பணம் கொடுத்திருக்கிறார்கள். கிருபாகரன் இன்னும் என் மனைவிக்கு ரூ.3,10,000, முருகேசனுக்கு ரூ.2,70,000, குமாருக்கு ரூ.50,000-ம் கொடுக்க வேண்டும். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அரசுப் பணியில் இருப்பதால் என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்' என்றார். வெங்கடாச்சலம் கூறியது தொடர்பாக பாத்திரக்கடை உரிமையாளர் கிருபாகரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, 'நான் ஒரு பாத்திர வியாபாரி. வெங்கடாசலம் என்னிடம் வட்டிக்காகப் பணம் கொடுத்தார். பிறகு, ஜிம் ராமுவிடம் பஞ்சாயத்துக்குச் சென்றதால், அந்த பணத்தை வெங்கடாசலத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன்’ என்றார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'என் அண்ணன் மோசடி செய்கிறார்' - கலெக்டர் ரோகிணியிடம் புகார் அளித்த தம்பி
TAGS :
COMMENTS