[ad_1]



இலங்கை அருகே மையம்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, இப்போது ஒடிசா அருகே நகர்ந்துள்ளது. அதனால், தமிழகத்தில் மழை குறைந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் 14-ம் தேதி மாலை முதல் மழை பெய்யவில்லை. வரும் 17-ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும் என்று வானிலை மையத்தின் கணிப்பில் கூறப்படுகிறது.
இப்போது காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுவடைந்து, வங்கக் கடலின் மேற்கு மத்தியப் பகுதியில் மையம்கொண்டுள்ளது. இதனால், ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில், இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். ஆந்திராவின் வடக்கு கடலோரப் பகுதிகள், ஒடிசாவின் தென் கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மழை அளவு

தமிழகத்தைப் பொறுத்தவரை, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கடந்த 14-ம் தேதி காலை 8.30 மணி வரை 248.9 மி.மீ மழை பெய்திருக்கிறது. சென்னையில் 751.7 மி.மீ மழை பெய்திருக்கிறது. நாகை மாவட்டத்தில் 769.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில், மிக மிகக் குறைவாக 132 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழையின் தாக்கம், வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை இருக்கும்.