[ad_1]

நடிகர் கமல்ஹாசன் கடந்த பல மாதங்களாக பல்வேறு விஷயங்கள் பற்றி ட்விட்டர் மூலம் கருத்து கூறி வருகிறார். இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கமல்ஹாசன், `இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல்பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கலவலை அளிக்கின்றன' என்று ட்வீட் செய்துள்ளார்.






அந்த ட்வீட்டில் கமல் மேலும், `சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி, நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, நாராயணபுரம் முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது. நீர்நிலை ஆர்வலர்களுக்கோ மக்களுக்கோ இவ்வேரிகளின் கொள்ளளவு தெரியாது. நீர் வரத்துப் பாதைகளும், நீர் வெளியேரும் பாதைகளும் தெரியாது. தெரியாது என்பதைவிட நில அபகரிப்புக்கு வசதியாய் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசந்து குமட்டும் உண்மை. நன்மங்கலத்திலிருந்து மற்றொரு ஏரிக்கு நீர் வரும் பாதையை மறித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நீதிமன்றம் 2015லேயே உத்தரவு பிறப்பித்துவிட்டது. எனினும் இன்றுவரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும் குரலெழுப்பவும் ஊடகங்கள் தயவாய் உதவ வேண்டும். வருமுன் காப்போம். நித்திரை கலைப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.