[ad_1]
Chennai: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் உள்ள சுரங்க நடைபாதையில், கழிவுநீர் ஆறாகப் பெருகி ஓடுவதால், நடைபாதைவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி, உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நகரின் முக்கிய அலுவலகங்கள் இந்த சுரங்கப் பாதையைச் சுற்றி அமைந்துள்ளன.
இந்த சுரங்கப் பாதைக்கு மேலே ஓடக்கூடிய கழிவு நீர்க் கால்வாயிலிருந்து கசியும் கழிவு நீர், தலைக்கு மேலே ஊற்றுபோல பெருக்கெடுத்து ஒழுகி, சுரங்கப் பாதை முழுவதும் கழிவு நீரால் நிரம்பியுள்ளது. அவ்வழியே தினமும் கடக்கும் லட்சக்கணக்கான மக்கள், அந்தக் கழிவுநீர் தலையில் விழுவதைத் தவிர்க்க முடியாமலும், அதில் மிதிப்பதைத் தவிர்க்க முடியாமலும் கடந்துசென்று கொண்டிருக்கிறார்கள்.
மழை ஓய்ந்த பின்னும் தலைக்கு மேலே கழிவுநீர் கசிவதால், சுரங்க நடை பாதையின் மேற்கூரை மேலும் பலவீனமடைந்து, இடியக்கூடிய அபாயமும் உள்ளது. சென்னையிலுள்ள பெரும்பாலான சுரங்க நடைபாதைகள் முறையான பராமரிப்பில்லாமல் இதே நிலையில்தான் உள்ளன. தினமும் அவ்வழியே நடந்துசெல்லும் பொதுமக்கள், அந்த சுரங்கப் பாதையைக் கவனிக்காமல் விட்டிருப்பதைக் கண்டு வேதனையை வெளிப்படுத்துகிறார்கள். உரிய அதிகாரிகள் இதை உடனடியாக சரிசெய்வார்களா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கழிவுநீர்க் குட்டையாகக் காட்சிதரும் சென்னை சென்ட்ரல் சுரங்கப்பாதை!
TAGS :
COMMENTS