[ad_1]





விமானப் பயணி ஒருவரை இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 





டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக விமான நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏற முயற்சிக்கும், ராஜீவ் கட்டியால் என்ற பயணியிடம் விமான நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், 2 ஊழியர்கள் அவரைத் தாக்குவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. அந்த சம்பவத்தின் போது உடனிருந்த மற்றொரு ஊழியரான மோண்டு கர்லா என்பவர், அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து தற்போது வெளியிட்டதாகத் தெரிகிறது. சம்பவத்தின் போது சக ஊழியர்கள் அந்த பயணியைத் தாக்குவதை மோண்டு கர்லா தடுக்க முயல்வதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய விமான நிறுவனம், வீடியோ பதிவுசெய்த மோண்டு கர்லாவை பணியிடை நீக்கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. சம்பவம் நடந்து 22 நாட்கள் கடந்தபின்னர், அந்த வீடியோ வெளியான பின்னர் இண்டிகோ விமான நிறுவனம் தற்போது மன்னிப்புக் கோரியுள்ளது. இதுதொடர்பாக அந்த ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது. 

இதுதொடர்பாக பேசிய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பயணியைத் தாக்கிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இண்டிகோ விமான நிறுவன நிர்வாகத்திடம் பேசியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், விசாரணை நடத்தி குறிப்பிட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 


#WATCH: IndiGo staff manhandle a passenger at Delhi's Indira Gandhi International Airport (Note: Strong language) pic.twitter.com/v2ola0YzqC
— ANI (@ANI) November 7, 2017
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்