[ad_1]





இடைகாட்டூரில் கடந்த வாரம் மூன்று போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டதாக மருத்துவத் துறை இணை இயக்குனர் விஜயன்  மதமடக்கி தெரிவித்திருந்தார். அதில் இரண்டு மாதம் கை குழந்தையுடன் கைது செய்யப்பட்டிருந்தார் ஹோமியோபதி மருத்துவரான பாண்டீஸ்வரி. அதே ஊரில் இயங்கி வந்த  ஜஹாங்கிர், நாகராஜன் என இரண்டு போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
கைது குறித்து பேசிய ஹோமியோபதி டாக்டர் பாண்டீஸ்வரி, 'நான் திருமங்கலம் தமிழ்நாடு ஹோமியோபதி கல்லூரியில் 2009-ம் ஆண்டு படித்து முடித்திருக்கிறேன். சென்ற ஆண்டில் இருந்து இடைக்காட்டூரில் கிளினிக் நடத்தி வருகிறேன். மற்ற போலி டாக்டர்களின் பேச்சை கேட்டு கொண்டு மருத்துவத்துறை இணை இயக்குனர் விஜயன் மதமடக்கி என்னிடம், எந்த விளக்கமும் கேட்காமல் என்னை போலி மருத்துவர் என்று தெரிவித்திருந்தார். நான் சொன்ன விளக்கத்தையும் கேட்கவில்லை. எனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் மனிதாபிமானம் இல்லாமல் காவல்துறையை வைத்து கைது செய்தார்கள். மதுரை மத்திய சிறையில் மூன்று நாள் என் கைக்குழந்தையுடன் இருந்துவிட்டு வந்திருக்கிறேன். நான் ஐந்தரையாண்டு ஆங்கில மருத்துவர்களைப்போல் ஹோமியோபதி படிப்பு படித்து முடித்து விட்டு தான் வெளியே வருகிறோம். தமிழ்நாடு ஒருங்கிணைந்த மருத்துவச் சட்டம் 1956 தமிழ்நாடு ஹோமியோபதி மெடிசின் ஆக்ட் 1971, சித்தா மெடிசின் ஆக்ட் 1997 படி நாங்களும் எம்.பி.பி.எஸ் டாக்டர்களுக்கு சமமானவர்கள் தான். எங்களுக்கென்று தனியாக பதிவாளர் இருக்கிறார். அவர் தான் எங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க முடியும். எங்களுக்கான சட்டம் இப்படி இருக்கும்போது என் மீது விஜயன்மதமடக்கி எடுத்த நடவடிக்கை திட்டமிட்டு எங்களை ஒடுக்குவதற்காவே. என்னை போலி டாக்டர் என்று மக்கள் மத்தியில் அசிங்கப்படுத்தியிருக்கிறார்.  ஆகையால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் போலி டாக்டர் என்றால் விஜயன் மதமடக்கியும் போலி டாக்டர்தான். என்னையும் என் பச்சிளம் குழந்தையும் சிறைக்கு தள்ளிய அவரை நீதிமன்றத்தில் ஏற்றாமல் விடமாட்டேன் என்றவர் மாவட்ட ஆட்சியர் விசாரணை இன்று மாலை நடந்தது. அப்போது விஜயன் மதமடக்கியும் ஆஜரானார். இறுதியில் அவர் செய்தது தவறு என்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும், பாண்டீஸ்வரி மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் எஸ்.பிக்கு உத்தரவிட்டார் ஆட்சியர் லதா.சிவகங்கை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் விஜயன் மதமடக்கியிடம் இது குறித்து பேசியபோது, 'ஹோமியோபதி டாக்டர்கள் அலோபதி மருத்துவம் செய்யக்கூடாது என்பதுதான் சட்டம். உயர்நீதிமன்றமும் அதே உத்தரவு வழங்கியிருக்கிறது' என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்