[ad_1]





'70 வருடங்களில் ஐ.எஸ்.ஐ-யால் செய்ய முடியாததை மூன்று ஆண்டுகளில் பா.ஜ.க செய்துள்ளது' என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 





ஆம் ஆத்மி கட்சியின் ஐந்தாம் ஆண்டு விழா, டெல்லியிலுள்ள ராம் லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, அங்கு திரண்டிருந்த  ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் அர்விந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர், 'சி.பி.ஐ நீதிபதி பி.ஹெச்.லோயாவின் மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நீதிபதிகள்கூட பா.ஜ.க-வின் ஆட்சியில் பாதுகாப்பாக இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழலுக்கு எதிராக இதே மைதானத்தில் போராடினோம்.

தற்போது, நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. பா.ஜ.க அரசு, ஊழலில் காங்கிரஸ் அரசை மிஞ்சியுள்ளது. குஜராத் மாநிலத் தேர்தலில் பா.ஜ.க தோற்க வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது. குஜராத்தில் எந்தக் கட்சி பா.ஜ.க-வை தோற்கடிக்குமோ, மக்கள் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். நாடு, தற்போது நெருக்கடியான நிலையில் இருந்துவருகிறது. பா.ஜ.க நாடு முழுவதும் இந்து, முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கனவை பா.ஜ.க செய்கிறது. பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ்.ஐ-யால் 70 ஆண்டுகளில் செய்யமுடியாததை மூன்று ஆண்டுகளில் பா.ஜ.க செய்துள்ளது' என்றார். 
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");