[ad_1]
Chennai:
சென்னை பல்லவன் சாலையில் உள்ள மக்களுக்கு உணவு வழங்குவதற்காக ட்ரை சைக்கிளைத் தள்ளியபடி நிதியமைச்சர் ஜெயக்குமார் வந்தார்.
சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் கரையோரம் இருந்த மக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் சாப்பிட உணவில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பலர் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் இருக்கின்றனர். சாலைகள், தெருக்கள், வீடுகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மண்டலங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, நிதியமைச்சர் ஜெயக்குமார், சென்னை பல்லவன் அருகே உள்ள குடியிருப்புக்கு ட்ரை சைக்கிள் அண்டாவில் உணவைக்கொண்டு வந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் உணவு வழங்கினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எந்த இடர்ப்பாடுகளையும் சந்திக்க அரசு தயாராக உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. மழை நீர் தேங்குவது வேறு, வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வேறு" என்று கூறினார்.
அமைச்சர் வேலுமணி, சிந்தாதிரிப்பேட்டையில் மழைப் பாதிப்பு நிவாரண முகாமில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தயாரிக்கப்படும் இடத்தை அவர் பார்வையிட்டார். அப்போது, உணவுகளைத் தயார் செய்யும் ஊழியர்களிடம் காய்கறிகள் தரமானதாக இருக்கிறதா என்று கேட்டறிந்ததோடு, அவற்றைக் கையில் வாங்கிப் பார்த்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, "மழை பாதிப்புக்கான நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது. இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. தற்போது பல இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. பருவ மழை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தூர்வாரும் பணி தொடங்கிவிட்டது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கடந்த 4 நாள்களில் சாலைகளில் விழுந்த 53 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது" என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ட்ரை சைக்கிளில் அண்டாவில் சாப்பாடுடன் வந்த நிதியமைச்சர் ஜெயக்குமார்!
TAGS :
COMMENTS