[ad_1]


Kancheepuram: 

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரில் நேற்று இரவு இரண்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒரு பெண்ணைப் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் அந்தந்தச் சட்டக்கல்லூரி மாணவர்களை அடித்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சட்டக்கல்லூரி மாணவர்கள் இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனர்.சட்டக்கல்லூரி மாணவர்களோடும் வழக்கறிஞர்களோடும் வந்த அந்த மாணவர்கள் மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் பெண்கள் பாதிக்கப்பட்டதால் அந்தப் புகாரை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த  சட்டக் கல்லூரி மாணவர்கள் மறைமலைநகர் காவல்நிலையத்தைச் சூறையாடியதாகக் கூறப்படுகிறது. சத்தம்கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அவற்றை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தகவல் குறித்து உண்மையை அறிய மறைமலைநகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகனுக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. காவல்நிலையத் தொலைபேசி எண்  அவுட் ஆஃப் சர்வீஸ் நிலையிலிருந்தது. காவல்துறை சரியான விளக்கம் கொடுத்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும்.