[ad_1]





'ஒரு சிலர் செய்த தவறின் காரணமாக ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.





சிவகங்கையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதன்பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஆளுநரின் ஆய்வு திட்டமிடப்பட்டது இல்லை. ஆளுநர் ஆய்வுகுறித்து எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வரி ஏய்ப்போர்மீது வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தது வருத்தம் அளிக்கிறது. வருமான வரித்துறை சோதனை யாரால் நடைபெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். நீதிமன்றத்தின் ஆணை பெற்றுதான், வருமான வரித்துறை ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். டி.டி.வி.தினகரன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியிலேயே இல்லை. அவருக்கும் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஊடகங்கள் பரபரப்புக்காக டி.டி.வி.தினகரனின் செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்' என்று தெரிவித்தார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");