[ad_1]





காரைக்குடியில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



இதுகுறித்து காரைக்குடி நகர் பொதுமக்கள் கூறும் போது...

 

`அடுத்த வாரம் சிவகங்கையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. காரைக்குடி, ஐந்து விளக்கு பகுதியில் மார்பளவு  எம்.ஜி.ஆர் சிலையை 1984-ம் ஆண்டு  சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியான கிருஷ்ணன் என்பவர் குப்பைத்தொட்டி அருகே அமைத்தார். நீண்ட காலமாகிவிட்டதால் சிமென்ட் சிலையான அது சிதைந்து போக  ஆரம்பித்தது. 

 

2015-ம் ஆண்டு குப்பைத் தொட்டி அகற்றப்பட்டு பீடம் கட்டி, வேறு புதிய சிலையைக் கொண்டு வந்தார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள். அனுமதியில்லாமல் சிலை வைக்கக் கூடாது என்று பிரச்னைகள் கிளம்பிதால் மீண்டும் பழைய மார்பளவு எம்.ஜி.ஆர் சிலையை அ.தி.மு.க. நகர் செயலாளர் மெய்யப்பன் கொண்டு வந்து வைத்தார். அதோடு கிடப்பில் கிடந்த எம்.ஜி.ஆர் சிலை தற்போது எந்த அனுமதியும் பெறாமல் 11.11.2017 அன்று இரவோடு இரவாக மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. இதைக் கண்டு எதிர்க்கட்சியினர் அதிர்ச்சியானார்கள். அதிகாரிகளும்  இதை கண்டும் காணாதது போல் இருக்கிறார்கள்' என்கிறார்கள்.

 

சிவகங்கை நகர் மக்கள் பேசும் போது...

 

`கர்மவீரர் காமராஜர் சிலை அரண்மனை வாசல் முன்பு அமைந்துள்ளது. சிவகங்கையில் மார்பளவு சிலையை நடிகர் திலகம் சிவாஜி திறந்து வைத்தார். இதுவும் எம்.ஜி.ஆர் சிலையைப் போல் சிதைந்து போனதால் முழு உருவ காமராஜர் சிலை வைக்கப்பட்டு தற்போது துணியால் கட்டப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிய சிலை வைப்பதற்கு அனுமதியில்லை. தற்போது அ.தி.மு.க. ஆளும் கட்சி என்பதால் எம்.ஜி.ஆர் சிலையை வைத்து விட்டார்கள். எம்.ஜி.ஆருக்கு ஒரு நீதி காமராஜருக்கு ஒரு நீதியா?' என்கிறார்கள்.

 

இந்த சிலை விவகாரம் நீதிமன்றம் செல்லவும் இருப்பதாக தகவல் ஒரு பக்கம் உலா வருகிறது. இன்னொரு பக்கம் பழைய எம்.ஜி.ஆர் சிலையை போலீஸ் தேடிவருகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்