[ad_1]

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக டி.டி.வி.தினகரன் அணியின் மதுரை மாவட்ட வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த கவிஸ்ரீ தினேஷ் என்பவரை, திருமங்கலம் காவல்துறையினர் இன்று காலை அழைத்து சென்றனர். பின்பு எந்த ஆதராமும், புகாரும் இல்லாததால் அவரை விடுவித்துள்ள விவகாரம் பரபரப்பாகியுள்ளது.




இதுபற்றி கவிஸ்ரீ தினேஷிடம் பேசினோம். ";நாங்கள் அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் துரோகம் செய்தவர்கள் பற்றி நாகரீகமாக கருத்துக்களை கூறி வருகிறோம். இதற்கு கட்சியினரிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில், என்னுடைய முகநூல் பதிவில், “அம்மா வாழ்ந்த போயஸ் இல்ல வாசலில் கைகட்டி நின்றவர்கள், இப்போது நடந்த வருமான வரித்துறை சோதனையை வேடிக்கை பார்க்கிறார்கள்” என்று கருத்து பதிவிட்டேன்.




இது அமைச்சர் உதயகுமாருக்கும், அவருடன் உள்ளவர்களுக்கும் ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது. உடனே என்னை கைது செய்து சிறையில் அடைக்கும்படி வாய்மொழியாக திருமங்கலம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அமைச்சர் சொல்லிவிட்டாரே என்று உடனே என்னை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தார்கள். தொடர்ந்து அமைச்சரின் ஆட்கள் போலீஸாருக்கு போன் செய்து கொண்டிருந்தார்கள். ஆனல், திருமங்கலம் இன்ஸ்பெக்டர் சட்டத்தை மதிப்பவர், புகாரும் இல்லாமல், எந்த ஆதாரமுமில்லாமல் என்னை கைது செய்ய முடியாது என்பதால், எழுதி வாங்கிக் கொண்டு விடுவித்தார்கள். போலீஸில் பொய்ப்புகார் கொடுத்து எங்களை பணிய வைக்கலாம் என்று நினைக்கிறார்கள். டி.டி.வியின் தம்பிகளான நாங்கள் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம். துரோகிகள் கருத்தை கருத்தால் சந்திக்க அஞ்சுகிறார்கள் என்பது தெரிகிறது"; என்றார்.